மீதொட்டுமுள்ள பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

மேல் மாகாண கிழக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம மீதொட்டுமுள்ள பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சட்ட விரோத மதுபானம் கைப்பற்ற பட்டுள்ளது, 120 போத்தல்களில் காணப்பட்ட 90,000 லீட்டர் சட்டவிரோத மதுபானத்தை தம்வம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மீதொட்டுமுள்ள பிரதேசத்தை சேர்ந்த 48,49 வயதுகளையுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர் கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண கிழக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.