விஜய முருகன் இயக்கத்தில், பி. ஜி. முத்தையா தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது திரைப்படம் தான் 'காக்டெய்ல்'.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு சிறிய புள்ளிக்கு பக்கத்தில் ஒரு பெரிய புள்ளி வைப்பது போன்று இவ் சர்ச்சையை அடுத்து தீடீர் திருமண பந்தத்தில் இணைந்தார் யோகி பாபு. 

சர்சசைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டபோதும் அந்த திரைப்படத்தை பார்த்தால் தான் முழுவிபரம் புரியும் என்ற அளவிற்கு ரகிகர்களிடம்  'காக்டெய்ல்' படத்திட்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

மார்ச் 6 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தில், யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் 'விஜய் டிவி கலக்கப்போவது யாரு' புகழ் பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும் இவர்களுடன் இந்திய சினிமாவில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 'காக்டெய்ல்' என்ற கிளி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றமை டீசரை பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.

இதோ டீசர்..