அமெரிக்காவை சேர்ந்த பாப் ஸ்மோக் என்ற 20 வயதுடைய பிரபல ‘ரெப்’ பாடகர் இனந்தெரியாத கொள்ளை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் பஷர் பராகா ஜாக்சன் ஆகும். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இவர், வீட்டில் தனியாக இருந்தபோது கொள்ளை கும்பல் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாப் ஸ்மோக் கொள்ளை கும்பலை விரட்டியடிக்க அவர்களுடன் போராடினார்.
அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன், இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவே, துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த பாப் ஸ்மோக்கை அவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தப்போதும், சிகிச்சை பலனளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பாப் ஸ்மோக்கின் மறைவை தொடர்ந்து, ‘ராப்’ மற்றும் ‘பாப்’ சமூக வளைத்தளங்கள் இணையதளம் வாயிலாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM