இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்ததுடன் , மேற்கிந்திய தீவுகளை துடுப்பதெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள்  289 ஓட்டங்களுக்கு 7  விக்கெட்டினை இழந்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

இதில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பகாக செயல்பட்டனர்.

அத்தோடு மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 289 என்ற நிர்ணய ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.