நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக அவ்வப்போது அமுல்படுத்தப்படும் நீர் வியோக  தடை குறித்து பொது மக்களுக்கு அறிவிக்க குறுஞ்செய்திச் சேவை அறிமுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நீர் இணைப்பின் கணக்கு எண்ணை 071 939 99 99 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சேவையின் மூலம், பொதுமக்கள் தங்கள் மாதாந்திர நீர்க் கட்டணம், செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து அவசர நீர் வெட்டுக்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்று கொள்ளலாம்.

இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாகப் பெற்று கொள்ளலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.