உலக முழுவதும் உள்ள இந்துக்களால் நேற்று மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவன் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.

மகா சிவராத்திரி என்பது அன்று முழுவதும் சிவனுக்கு விரதமிருந்து இரவு முழுவதும் பூசை செய்து கண் விழித்திருக்க வேண்டும்.  அவ்வாறு இருந்தால் செய்த பாவங்கள், தெரியாமல் செய்த பாவங்கள் என அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். நினைத்தக் காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

எனவேதான் அன்று சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். எனவேதான் அன்று சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகாவில் கலபுரகி நகரத்தில் உள்ள பிரம்ம குமரிஸ் என்ற இடத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைப்பெற்றுள்ளது.

அதுவும் 300 கிலோ எடைக் கொண்ட பட்டாணிகளைக் கோர்த்து இந்த சிவலிங்கம் உருவாக்கப்பட்டது இதன்  தனிச்சிறப்பாகும்.