வளர்ச்சியின்மை  காரணமாக பாடசாலையில் மோசமான துன்புறுத்தலை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய சிறுவனிற்கு ஆதரவாக உலகம் அணிதிரண்டு வருகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் யராக்காபெய்ஸ் கடந்த சில நாட்களிற்கு முன்னர் வெளியிட்ட மனதை உருக்கும் வீடியோவை தொடர்ந்தே உலக நாடுகளில் பலர்அந்த சிறுவனிற்காக குரல்கொடுத்து வருகின்றனர்.

செவ்வாய்கிழமை வெளியான அந்த வீடியோவில் குவாடன் பேல்ஸ் என்ற அந்த சிறுவன் அழுதவண்ணம் தனக்குதானே காயம் ஏற்படுத்திக் கொள்ளப்போவதாக தெரிவித்தான்.

குறிப்பிட்ட வீடியோவில் தோன்றிய  சிறுவனின் தாயார் இது பாடசாலைக்கு செல்லவிரும்பும், கல்வி   கற்க விரும்பும் சிறுவன் ஒருவன் பாடசாலையில் துன்புறுத்தல்களிற்கு உள்ளாகும் சம்பவம் என குறிப்பிட்டிருந்தார்.

தனது மகனின் வளர்ச்சியின்மையை காரணம் காட்டியே பாடசாலையில் மாணவர்கள்  கேலி செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

சிறுவனின் தாயார் தனது மகன் தொடர்பில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் சமூக தலைவர்களிடம் உதவியை கோரியிருந்தார்.

உங்களால் தயவு செய்து உங்கள் பிள்ளைகள்  குடும்பத்தவர்கள் நண்பர்களிற்கு அறிவுரை வழங்க முடியுமா எனவும் அவர் கேட்டிருந்தார்.

பாடசாலையில் எனது மகனிற்கு ஆதரவான அமைப்பு முறையொன்று காணப்படுகின்றது எனினும் இது போதாது என வீடியோவில் தெரிவித்திருந்த தாயார்  பாடசாலையில் எனது மகன் எதிர்கொண்ட ஈவிரக்கமற்ற சம்பவங்கள் அவனது மனோநிலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன,இதன் காரணமாக எனது மகனை பாடசாலையிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தனது மகனின் வளர்ச்சியின்மையை காரணம் காட்டியே பாடசாலையில் மாணவர்கள்  கேலி செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

குவாடன் பேல்சி;ன் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பெருமளவானவர்கள் பார்வையிட்டுள்ள நிலையில்  உலகின் பல நாடுகளில் இருந்து சிறுவனிற்கு ஆதரவு கிடைத்துள்ளது.

நாங்கள் குவாடனிற்கு ஆதரவாக உள்ளோம் என ஹாஸ்டாக்கின் பி;ன்னாள் பல சிறுவனிற்கு ஆதரவான அணிதிரண்டுள்ளனர்.

பலவீனமானவர்களை துன்புறுத்;தல் என்பதுசமூக ஊடகங்களில்  பரவி வருவதுடன்  பலர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர்.

சிறுவனிற்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய நடிகர் ஹக் ஜக்மென் நீ நினைப்பதற்கு அதிகமாக நீ பலமானவன் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்கள் மல்யுத்த வீரர்கள் உலகநாடுகளின் சிறுவர்கள் என பலர் அவுஸ்திரேலிய சிறுவனிற்கு தங்கள் ஆதரவை வெளியிட்டுவருகின்றனர்.