அமெரிக்காவின் புளோரிடா மா­நிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவங்களை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் பிரான்ஸூக்குமான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

யூரோ கிண்ண போட்டிகள் நடைபெற்றுவரும் இச்சமயத்தில் பிரான்ஸில் இரட்டை கொலை இடம்பெற்றிருப்பதும், அக்கொலைகளுக்கு ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்கள் உரிமை கோரியுள்­ள­னர். அதே சமயம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயி­ரி­ழந்­தனர். 

இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு படைகளையும் பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே தீர்மானம் முடிவாகியுள்ளது. 

நேற்று முன்­தினம் செவ்வாய்கிழமை பிரான்ங்சுவா ஹோ­லண்­­டே மற்றும் ஒபாமா ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்கள். அதன்போதே இவ் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.