எதிர்வரும் பொதுத் தேர்தலில் 40 க்கும் அதிகமான வேட்பாளர்களை அரசியல் கட்சிகளும் , சுயாதீன  குழுக்களும் களமிறக்கினால் பொதுத் தேர்தல்களின் முடிவுகளை அறிவிக்கும் காலம் 48 மணித்தியாலங்கள் நீடிக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாக்குகளின் இறுதி முடிவை அறிவிக்க குறைந்த பட்சம் 48 மணித்தியாலாங்கள் அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில் சுமார் 300,000 புதிய வாக்களார்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி தேர்தலின் செலவை விட பொதுத் தேர்தலின் செலவுகள் அதிகமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.