சீனாவின் ஹுபே மாகாண தலைநகரான வுஹானில் இருந்து  பரவிய கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. 

இந்நிலையில்,  இந்த கொவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,360 ஆக உயர்ந்துள்ளதோடு, சீனாவில் மட்டும் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றை தினத்துக்குள் (21.02.020) மட்டும் மத்திய சீனாவில் 397 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோய்கள் இனங்காப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார நிலையம் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75, 465 லிருந்து 76,288 ஆக அதிகரித்துள்ளது. 

உலகளவில் 77,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே 15 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றின் மையப்பகுதியான ஹூபேயின் மத்திய மாகாணத்தில் 109 புதிய உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு , மாகாணத்தின் தலைநகரான வுஹானில் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸானது தற்போது உலக நாடுகளில் பரவியுள்ளது.

1. சீனா: பாதிப்பு - 76,288  உயிரிழப்பு - 2,345

2. டயமண்ட் பிரின்சஸ் - 634, உயிரிழப்பு - 2

3. ஜப்பான்: பாதிப்பு - 110, உயிரிழப்பு - 01

4. சிங்கப்பூர்: பாதிப்பு - 85

5. ஹொங்கொங்: பாதிப்பு - 69 உயிரிழப்பு - 2

6. தாய்லாந்து: பாதிப்பு - 35

7. அமெரிக்கா: பாதிப்பு - 27

8. தாய்வான்: பாதிப்பு - 26  - உயிரிழப்பு - 1

9. மலேசியா: பாதிப்பு - 22

10. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 21

11. ஜேர்மன் : பாதிப்பு - 16

12. வியட்நாம்: பாதிப்பு - 16

13. பிரான்ஸ்: பாதிப்பு - 12, உயிரிழப்பு - 1

14. மாக்கோ: பாதிப்பு - 10

15. கனடா: பாதிப்பு - 09

16. பிரிட்டன்: பாதிப்பு - 09

17. டுபாய்: பாதிப்பு - 09

18. ஈரான்: பாதிப்பு - 18, உயிரிழப்பு - 04

19. இத்தாலி: பாதிப்பு - 22 உயிரிழப்பு - 1

20. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03, உயிரிழப்பு - 1

21. இந்தியா: பாதிப்பு - 03

22. ரஷ்யா: பாதிப்பு - 03

23. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02

24. பெல்ஜியம்: பாதிப்பு - 01

25. கம்போடியா: பாதிப்பு - 01

26. எகிப்த்: பாதிப்பு - 01

27. பின்லாந்து: பாதிப்பு - 01

28. நேபாள் : பாதிப்பு - 01

29. இலங்கை : பாதிப்பு - 01

30. சுவீடன்: பாதிப்பு - 01

31. தென்கொரிய: பாதிப்பு - 346, உயிரிழப்பு - 02

32.இஸ்ரேல் - பாதிப்பு 1

33.லெபனான் - பாதிப்பு 1