நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் கண்டறிய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி தொடர்பான சுற்றுலா மேற்கொண்ட பொழுது நீரில் மூழ்கி குறித்த 4 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்துக்கு குளிக்கச் சென்ற நான்கு மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில், மாணவர்களின் இறப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.