(எம்.எப்.எம்.பஸீர்)

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவை கத்தியால் குத்தி கொலை செய்வதாக அச்சுறுத்தும் வகையில், அவருக்கு குறுஞ் செய்தி அனுப்பிய நபர் ஒருவரை சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

29 வயதான கொழும்பு - ராஜகிரிய பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின்  தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்படும்  நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரை 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்து வருவதாக பொலிஸார் கூறினர்.