பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை ; பிரதான சந்தேக நபர்களுள் ஒருவர் கைதான நிலையில் மேலும் இருவருக்கு வலை வீச்சு

Published By: Vishnu

21 Feb, 2020 | 08:10 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த   கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய  பொலிஸ் கான்ஸ்டபிளின் உயிரிழப்பு தொடர்பில் பிரதான சந்தேக நபர்களுள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கிரிபத்கொடை பகுதியில் உள்ள  ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த   கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய  பொலிஸ் கான்ஸ்டபிளின்  சடலம் இன்று மீட்கப்பட்டது. 

குளியாபிட்டிய - பன்னை, யக்வில காட்டுப் பகுதியின் வேரஹெர- புளுகஹவத்த பகுதியில் வைத்து இந்த சடலம் இன்று அதிகாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

72 மணி நேரம் யக்வில கடடில் குளியாபிட்டிய, பன்னை, களனி பொலிஸ் வலயத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 100 பேர் வரை மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுத்த  தேடுதலில் இந்த சடலம் மீட்கப்பட்டது.

சடலத்தின் அடையாளங்களை வைத்து, குறித்த சடலம் காணாமல் போன 14535 எனும் இலக்கத்தை உடைய பொலிஸ் கான்ஸ்டபிள்  ஜயந்த ராஜபக்ஷவினுடையது என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். 

இந் நிலையில் இந்த கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான களனிய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து கைதுசெய்துள்ளனர். 

சுத்தா எனப்படும் குறித்த சந்தேக நபரிடம் தொடர் விசாரணைகளை பொலிஸார் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில், இதனுடன் தொடர்புடைய மேலும் இரு பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவில், மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையில், களனி பொலிஸ் வலயத்தின் பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸின் ஆலோசனைக்கு அமைய  குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவின் கீழான குழுவினர் இது குறித்த பிரதான விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

கடந்த 16 ஆம் திகதி  அதிகாலை 1.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் 37 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த ஜயந்த ராஜபக்ஷ எம்னும் குறித்த பொலிஸ் கான்ஷ்டபிள் கடத்தப்பட்டிருந்தார். 

அவர் கடவத்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சாரதியாக கட்மையாற்றி வந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47