(எம்.ஆர்.எம்.வஸீம்)

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சரியான கொள்கை அடிப்படையிலான தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு தாம் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நேற்று பாராளுமன்ற குழு அறையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமேதா ஜி. ஜயசேன, வைத்தியர் சுதர்ஷனி பெர்ணாண்டுபுல்லே, வைத்தியர் துசிதா விஜேமான்ன, ஸ்ரீயானி விஜேவிக்ரம, ரோஹிணி குமாரி விஜேரத்ன, விஜயகலா மகேஷ்வரன், ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.