வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழிலிருந்து ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்று நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சென்றபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

குறித்த விபத்தில் வாகனம் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி உயிர்தப்பியுள்ளார். அத்துடன், சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.