ஈரானில் 11 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றுவரும் நிலையில் அந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

ஈராக்கில் 290 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பாராளுமன்ற தேர்தல், பொருளாதார பிரச்சினைகள், அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு மத்தியிலும் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கும் மத்தியில் தேர்தல் வாக்களிப்பு ஒரு மந்தகதியில் இடம்பெறுவதாக அந்நாட்டின் மத தலைவர்  அலி ஹொசைனி கமேனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையைில் அவர் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வாக்களித்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

250 க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடும் இத் தேர்தலில் சுமார் 58 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்தோடு  18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு , சுமார் மூன்று மில்லியன் பேர் தனது முதலாவது  வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photography by : Al Jazeera