நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், நீருக்கு பெரும்  தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்படுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேற்கண்டவாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.