உல­கவாழ் இந்­துக்கள் பக்­தியுடன் அனுஷ்­டிக்கும் மகா சிவராத்­திரி தினக் கொண்­டாட்­டத்தில் இலங் ­கைவாழ் இந்­துக்­க­ளுடன் மகிழ்ச்­சி­யுடன் இணைந்­து­கொள்­வ­துடன் இப்­பு­னித மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்­படும் தீப ஒளி நாட்டு மக்­களின் வாழ்வை ஒளி பெறச் ­செய்­யட்டும் என ஜனா­தி­பதி விடுத்­துள்ள வாழ்த் துச் செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிவ­ராத்­திரி தினத்தை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இந்து சமய விழாக்களில் ஒன்­றான மகா சிவ­ராத்­திரி தினத்தில் மேற்­கொள்­ளப்­படும் பல்­வேறு சமயக் கிரி­யை­களின் ஊடாக துர்க்­கு­ணங்­களிலிருந்து விலகி உளத்­தூய்­மையை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்­பது இந்­துக்­களின் நம்­பிக்­கை­யாகும். 

பல்­வேறு சிக்­கல்கள், முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் முன்­னோக்கிச் செல்லும் இன்­றைய உலகில், மனி­த­னுக்கு உள அமை­தியைத் தரு­வது ஆன்­மீ­க­மே­யாகும்.  

தமிழ் சமூ­கத்­தினர் உட்­பட அனைத்து இலங்­கை­யர்­களும் புத்­தெ­ழுச்­சி­யுடன் புதி­யதோர் எதிர் காலம் பற்­றிய எதிர்­பார்ப்­புடன் இருக்­கின்ற இச்­சூழ்­நி­லையில், முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் சமய நல்­லி­ணக்­கத்­துடன் நாட்டின் அனைத்து இனங்­களும் தமது தாய்நாட்டின் முன்­னேற்­றத்­துக்­காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையிட்டு நாட்டின் தலைவர் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.