இலங்கை படையினரின் யுத்த வெற்றி ஹொலிவூட்டை ஈர்க்கவில்லை- இராணுவதளபதிக்கு எதிரான தடை நீதி குறித்த கொள்கைகளிற்கு முரணானது - அமெரிக்காவிற்கான இலங்கைதூதுவர்

21 Feb, 2020 | 12:22 PM
image

குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இலங்கையின் இராணுவதளபதிக்கு எதிராக தடைகளை விதிப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளாலும் ஆதரிக்கப்படும் இயற்கை நீதிக்கு இதுமுரணான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அதன் இறைமை பாதுகாப்பு தேசிய பெருமை ஆகியவற்றை பேண அனுமதிக்கும், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடக்கும் கௌரவமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதே இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின்; நோக்கம் என  அமெரிக்காவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது படையினர் குறித்து எப்படி பெருமிதம் கொள்கின்றதோ இலங்கையும் அவ்வாறே தனது படையினர் குறித்து பெருமிதம் அடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டிலும் யுத்த வீரர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள ரொட்னி பெரேரா அமெரிக்கா உட்பட பல ஜனநாயக நாடுகளை சேர்ந்த படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளதுடன் வெறுமனே குற்றச்சாட்டுகளிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கள் யுத்த முயற்சிகள் ஹொலிவுட் திரைப்படங்களில் இடம்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கையின் பாதுகாப்பு படையினர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தங்களிற்கு வழங்கிய பணியை நிறைவேற்றி பயங்கரவாதிகளிடமிருந்து எங்களை விடுவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரதமர் ஆகியோரின் கருத்துக்களை  நினைவுபடுத்தியுள்ள தூதுவர் அமெரிக்கா தனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யச்செய்வதற்காக இலங்கை இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் தீவிர ஈடுபாட்டை வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08