அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அசுரவேக பவுன்சரை வீசி ஸ்மித்தினை திணறடித்த 16 வயது இளைஞன் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

தென்னாபிரிக்க இளைஞனே இந்த பவுன்சரை வீசியுள்ளான்.

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் வலைப்பயிற்சியில் தென்னாபிரிக்காவின் கிங்எட்வேர்ட் பாடசாலை மாணவர்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிரஹாம்ஸ்மித் குயின்டன் டி கொக் போன்றவர்கள் இந்த பாடசாலையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த வலைப்பயிற்சியின் போது 16 வயது இளைஞனின் பவுன்சரினால் ஸ்மித் எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

திணறவைக்கும் உயரத்தில் வந்த பந்திலிருந்து ஸ்மித் விலக முற்பட்டவேளை அது துடுப்பின் நுனியில் பட்டவாறு வலையை தாக்கியுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெருமளவானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பலர் ஸ்மித்திற்கு பந்தை வீசிய அந்த இளைஞனை பாராட்டியுள்ளனர்.ஒரு உண்மையான திறமை போல தோன்றுகின்றது,ஸ்மித்திற்கு அந்த பந்தை பற்றி ஒன்றுமே தெரியவில்லை போல தோன்றுகின்றது என ஒருவர் பதிவு செய்துள்ளார்.

இந்த இளைஞன் மோர்னே மோர்க்கலை நினைவுபடுத்துகின்றான் என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.