புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் பேரவையின் வடமேல் மாகாண பணிப்பாளர் எம்.எஸ்.எம்.முஸம்மில் மேற்பார்வையிலும் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.சபீக் தலைமையிலும் இடம்பெற்றது. 

 குறித்த கௌரவிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், புத்தளம் நகரப் பிதா கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் தொழிலதிபர் அலிசப்ரி ரஹீம், நீர்பாசன அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.எஸ்.அப்துல்காதர், துறைமுக அத்தியட்சகர் முஹம்மது லுக்மான் உட்பட தொழிலதிபர்கள், சமயத் தலைவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.