கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகளாவிய ரீதியில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 76,738 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 2,247 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 18,562 பேர் குணமடைந்துள்ள நிலையில் 12,065 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கெரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து இரண்டு மாதங்களின் பின்னர், தற்போது சீனாவின் பிரதான நிலப் பரப்புகளில் குறைந்தது 75,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,236 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான கொரோனா வழக்குகள் ஹூபே மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அங்கு 62,422 கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளன, இதில் 2,144 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் ஹூபேக்கு வெளியே 13,000 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் மற்றும் 92 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

பெப்ரவரி 20 ஆம் திகதி நிலவரப்படி சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரம் :

ஹூபே: பாதிப்பு - 62,422 , உயிரிழப்பு - 2,144 

குவாங்டாங்: பாதிப்பு - 1,332, உயிரிழப்பு - 5

ஹெனான்: பாதிப்பு - 1,265, உயிரிழப்பு - 19

ஜேஜியாங்: பாதிப்பு - 1,175,  

ஹுனான்: பாதிப்பு - 1,010, உயிரிழப்பு - 04

அன்ஹுய்: பாதிப்பு - 987, உயிரிழப்பு - 06

சீனாவில் பரவ ஆரம்பித்த கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸானது தற்போது 30 நாடுகளில் பரவியுள்ளது.

1. சீனா: பாதிப்பு - 75,465, உயிரிழப்பு - 2,236

2. ஜப்பான்: பாதிப்பு - 97+634 (டயமண்ட் பிரின்சஸ்), உயிரிழப்பு - 03

3. சிங்கப்பூர்: பாதிப்பு - 85

4. ஹொங்கொங்: பாதிப்பு - 69

5. தாய்லாந்து: பாதிப்பு - 35

6. அமெரிக்கா: பாதிப்பு - 27

7. தாய்வான்: பாதிப்பு - 24

8. மலேசியா: பாதிப்பு - 22

9. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 17

10. ஜேர்மன் : பாதிப்பு - 16

11. வியட்நாம்: பாதிப்பு - 16

12. பிரான்ஸ்: பாதிப்பு - 12

13. மாக்கோ: பாதிப்பு - 10

14. கனடா: பாதிப்பு - 09

15. பிரிட்டன்: பாதிப்பு - 09

16. டுபாய்: பாதிப்பு - 09

17. ஈரான்: பாதிப்பு - 5, உயிரிழப்பு - 02

18. இத்தாலி: பாதிப்பு - 04

19. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03

20. இந்தியா: பாதிப்பு - 03

21. ரஷ்யா: பாதிப்பு - 03

22. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02

23. பெல்ஜியம்: பாதிப்பு - 01

24. கம்போடியா: பாதிப்பு - 01

25. எகிப்த்: பாதிப்பு - 01

26. பின்லாந்து: பாதிப்பு - 01

27. நேபாள் : பாதிப்பு - 01

28. இலங்கை : பாதிப்பு - 01

29. சுவீடன்: பாதிப்பு - 01

30. தென்கொரிய: பாதிப்பு - 156, உயிரிழப்பு - 01