கடத்தப்பட்டதாக கூறப்படும் கடவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் 5 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

37 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் பன்னல - வேரகெர பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து  மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.