கடமையை பொருப்பேற்று முதல் நாள் வேலைக்கு  சென்ற பொலிஸ் அதிகாரி  பயணித்த  பஸ்ஸில் மோதி கடமை புரியும் சோதணை சாவடிக்கருகிலேயே    பலியான சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது   

மஸ்கெலிய நல்லத்தண்ணி பிரதான வீதியின் மவுசாகலை சோதணை சாவடிக்கருகிலேயே இன்று 20/02 இரவு 6.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது 

மெதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்து வந்த 40 வயதுடைய முன்று பிள்ளைகளின் தந்தையான அஜித் வீரசிங்க என்பவர் இன்று சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு விடேச கடமை நிமித்தம் இன்று மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் பெயர் பதிவு செய்து விட்டு இரவு நேர கடமைக்காக  மவுசாகலை  பொலிஸ் சோதணை சாவடிக்கு சென்ற போதே இவ் விபத்த்தில் சிக்குண்டு பலியானார் 

மஸ்கெலியாவிலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த பொலிஸ் அதிகாரி மவுசாகலை சோதணை சாவடியில் பஸ் சோதணைக்காக நிறுத்தப்பட்ட போது பஸ்ஸிலிருந்து இறங்கிய பொலிஸ் அதிகாரி முன்னால் நடந்து  சென்றுக்கொண்டிருக்கையில் பயணிகளை இறக்கிய பஸ்ஸை  சாரதி முன்னோக்கி  செலுத்திய போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பஸ்  பொலிஸ் அதிகாரியின் மீது மோதிக்கொண்டு முன்னோக்கி பாய்ந்து சென்றுள்ளது. இதன்போது பஸ்ஸில் மோதுண்ட பொலிஸ் அதிகாரி மீது பஸ்ஸின் முன் சில்லு ஏறிய நிலையில் அவர் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர் 

இந்நிலையில் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதிக்கு மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் தடைசெய்யப்பட்டதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்தோடு பஸ்ஸின்  சாதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பில் மேலதிக விசாணையை முன்னெடுப்பதாகவும் நல்லதண்ணி மற்றும் மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்