பதுளை, வத்தேகல காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்களை இன்று (20) முற்பகல் 11 மணி அளவில் பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டுவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தபட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, எக்கடாகொட, மாத்தளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 41, 45, 48 வயதுடையவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பதுளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.