(ஆர்.விதுஷா)
மலையகத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தமிழ் பிரதிநிதிகள் தெரிவாவதை தடுக்க பெரும்பான்மையின சக்திகள் முயற்சிப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இத்தகைய சதித்திட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாது விழித்துக்கொள்ளுமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், பசறை பகுதியில் இடம் பெற்ற பஸ்விபத்தை அடுத்து அந்த பகுதியூடாக பஸ் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மலையக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதால் இந்த விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இனவாதத்தை மையமாக கொண்டே இந்த பகுதிக்கான பஸ் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,
பசறை - மடுல்சீமை பகுதியில் பஸ் புரண்டு விபத்துக்குள்ளானமையினால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரு மாணவர் இன்னமும் கூட அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் ,மடுல் சீமை ஊடான பாடசாலை பஸ் சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை முற்று முழுதான இனவாதமாகவே நான் கருதுகின்றேன்.
தமிழ் பாடசாலை மாணவர்கள் மாத்திரம் அங்கு இல்லை மாறாக சிங்கள மாணவர்களும் உள்ளனர். இனவாத செயற்பாட்டின் காரணமாகவே பதுளை பெருந்தோட்டங்களில் இருக்கின்ற பாடசாலைகளுக்கு செல்லும் பஸ் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதனை வன்மையாக கண்டிப்பதுடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலையிட்டு இந்த பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரவேண்டும்.
ஜனாதிபதி கோத்தாபய அண்மையில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றின் போது இனவாத்தை முற்றாக ஒழிப்பதாக கூறிக்கொண்டார். அவ்வாறாயின் பதுளையின் குறித்த பகுதியில் இயங்கிய பஸ் சேவை மீள ஆரம்பிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதியிடவேண்டும்.
குறித்த பகுதியின் சுற்றாடல் நிலையைமையமாக கொண்டு சிறந்த பஸ் சேவையை வழங்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இருப்பினும் , அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM