(ஆர்.விதுஷா)

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் தினச் சம்பளத்தை கொடுக்குமாறு 22 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  வடிவேல்  சுரேஷ கோரிக்கை  விடுத்தார்.

எதிர்க்கட்சி  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கான  தீர்வை பெற்றுத்தருவதாக அரசாங்கம்  கூறியிருப்பினும் தோட்டக் கம்பனிகள் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க  தயாராகவில்லை. ஆகவே,  ஜனாதிபதி இந்தவிடயத்தில்  தலையிட்டு 1000  ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு 22 தோட்டக் கம்பனிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.