(செ.தேன்மொழி)

முறையான பொருளாதார முகாமைத்துவம் இன்றி அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், இதனால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை  ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தலொன்று இடம்பெறும் என்தை அறிந்து கடந்த அரசாங்கம் அது வரையிலான அரச செயற்பாடுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.

தற்போதைய அரசாங்கம் ஒழுங்கான முறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யாததால் இடைக்கால கணக்கறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இவ்வாறு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த பணத்திற்கு என்ன நடந்திருக்கும். சாதாரண மக்களின் பணமே இது , தேர்தலை இலக்குவைத்தா அரசாங்கம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை தயாரித்துள்ளது என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.