பன்முக சமூகமொன்றில் மொழி ஒரு நல்வாய்ப்பா அல்லது சவாலா ?

Published By: Digital Desk 3

20 Feb, 2020 | 04:26 PM
image

எமது அடையாளம்  படைப்பாற்றல் பண்பாண்மைகள் மரபுரிமை மற்றும் எமது வாழ்வு ஆகியவற்றுடன் எமது தாய் மொழி எவ்வாறு தொடர்புபட்டிருக்கிறது? பன்முக சமூகமொன்றில் மொழி ஒரு நல்வாய்ப்பா ? அல்லது சவாலா ? ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக மயமாக்கப்பட்ட சர்வதேச ஒழுங்கில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் பெரிதும் மதித்துப் போற்றுகின்ற சொத்துக்களான எமது மொழிகளை பாதுகாப்பதில் உள்ள முக்கியத்துவம் என்ன?

பெப்ரவரி 21 ( நாளை ) சர்வதேச தாய் மொழி தினத்தைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் பின்புலத்தில் மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் றியாஸ் ஹமீதுல்லா அண்மையில் வழங்கிய நேர்காணலில் விளக்கமாகப் பதிலளித்துள்ளார்.

அவரது நேர்காணல் வருமாறு ;

கேள்வி : பங்களாதேஷினால் அறிமுக்கப்படுத்தப்பட்ட தாய்மொழி தினத்தின் வரலாற்று பின்னணியைக் கூறுங்கள் ?

பதில் : பாகிஸ்தான் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தேசத்தின் மொழியாக உருது இருக்கும் என்று பிரகடனம் செய்தார்கள். பாகிஸ்தானிய சனத்தொகையில் 55 வீதமானவர்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களாக இருந்த போதிலும் கூட, இவ்வாறு செய்யப்பட்டது. ஒரு சனத்தொகையை அவர்களது தாய் மொழியில் இருந்து பிரித்துவிட்டால் பிறகு அவர்கள் தங்களது மரபுரிமையில் இருந்தும் வேர்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டுவிடுகிறார்கள். 1952 ஆம் ஆண்டின் முற்பகுதிகளில் இன்று பங்களாதேஷ் என்று தனிநாடாக இருக்கின்ற கிழக்கு பாகிஸ்தானின் வங்காளிகள் தங்களது மொழி மரபுரிமையைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1952 பெப்ரவரி 21 ஆம் திகதி சமுதாயத்தின் சகல தரப்பையும் சேர்ந்த வங்காளிகள் போராட்ட இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள். ஆனால் அமைதியான ஊர்வலத்தின் மீது ஆத்திரமூட்டப்படாமலேயே பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். பல சாதாரண மக்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர்.

ஒன்றுபட்ட பாகிஸ்தான் ஸ்தாபிக்கப்பட்டு முதல் 5 வருடங்களுக்குள் இது நடந்தது. அவை எல்லாம் இப்போது வரலாற்றின் ஒரு அங்கமாகப் போய்விட்டாலும் 1952 மொழி போராட்ட இயக்கம் தாங்கள் போராட வேண்டியது இதற்காக அல்ல என்பதை கிழக்கு பாகிஸ்தானிய மக்களை புரிந்துகொள்ள வைத்தது. ' ஒரு பெருநகரம் , அபிவிருத்தியடைந்த நாடு அல்லது தொலைவிலுள்ள ஒரு தீவு ஆகியவற்றில் எங்கெல்லாம் நாம் வாழ்கின்றோமோ அங்கெல்லாம் எமது தாய் மொழிகளில் ஒவ்வொன்றும் மதிக்கப்பட வேண்டியவை என்றும் மொழிகளை பொறுத்தவரை மேன்மையான மொழி என்று ஒன்று இல்லை என்பதையும் நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். சனத்தொகை , சமூகம் அல்லது நாட்டின் அளவு எத்தகையதாக இருந்தாலும் மொழிகளைப் பொறுத்தவரை அவை முக்கியமானவை அல்ல. சகல மொழிகளுமே போற்றப்பட்டு சமத்துவமான முறையில் பேணி வளர்க்கப்பட வேண்டும். பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மதிப்பிற்கு அர்த்தம் கொடுப்பதற்கு இது அத்தியாவசியமானதாகும்.

தங்களது தாய் மொழியை பாதுகாக்க முடியாமல் இருக்கும் மக்கள் உலகின் பல பாகங்களில் நூற்றுக் கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த தங்களது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நாளடைவில் அவர்கள் தங்களது மூதாதையர்களால் எழுதப்பட்ட சொந்த நூல் பொக்கிஷங்களை வாசிக்க இயலாமல் போய்விட்டார்கள். அவர்களது பிள்ளைகளைப் பொறுத்தவரையில் அவர்களது வரலாறு நேற்றைய தினத்திலிருந்தே தொடங்குகிறது. இந்த ஆபத்தை பங்களாதேஷ் மக்கள் 1950 களின் ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொண்டார்கள்.

பல தாசாப்தங்கள் கழித்து 1999 இல் கனடாவில் இருந்த ஒரு சில பங்களாதேஷிகள் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21 ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று யுனெஸ்கோவுக்கு யோசனை தெரிவித்து மகஜர் ஒன்றை அனுப்பினார்கள். நீண்ட கலந்தாலோசனைகளுக்குப் பிறகு அந்த யோசனைக்கு 28 நாடுகள் இணை அனுசரணை வழங்கி ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் ( சார்க் ) சகல உறுப்பு நாடுகளும் ( இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட ) இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கிய நாடுகளில் அடங்கும்.

தாய் மொழி தினத்தை யுனெஸ்கோவைக் கொண்டு அங்கீகரிக்கச் செய்வதற்கு எந்த ஒரு நாட்டினாலும் மகஜரொன்றை அனுப்பியிருக்க முடியும். ஆனால் எமது தாய் மொழிக்கான தகைசார்ந்த உரிமைகளைப் பெறுவதில் எமது மக்கள் செய்த தியாகங்கள் காரணமாக பங்களாதேஷ் இதற்காக முன்னரங்கில் செயற்பட்டது. இந்த சர்வதேச தாய் மொழித் தினம் இப்போது வருடாந்தம் பெப்ரவரி 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் இதுவரையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சுமார் 7000 மொழிகள் இத்தினத்தில் கொண்டாடப்படுகின்றன.

ஒரு மொழியைப் பேணி வளர்ப்பது அல்லது தங்களது தாய் மொழியின் ஊடாக ஒருவரை அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை கருத்துக்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த அனுமதிப்பது பொருள் இலாபத்தையோ அல்லது பொருளாதார விளைவுகளையோ நிச்சயமாகக் கொண்டு வராமல் இருக்கலாம். மொழியை எந்தவொரு உலோகாயதக் கண்ணாடி வில்லையின் ஊடாகவும் பார்க்கக் கூடாது.

1952 ஆம் ஆண்டில் மொழி உரிமையை வலியுறுத்தி போராடிய போது டாக்கா வீதிகளில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்ல. அதே போன்று டாக்காவில் எந்த வகையிலும் பிரபல்யமானவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. 1952 க்கு பிறகு 2 தசாப்தங்களில் வங்காளிகள் 1971 விடுதலைப் போரில் குதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அந்த ' மக்கள் யுத்தம் ' 1952 ஆம் ஆண்டின் மொழிப் போராட்ட இயக்கத்திலிருந்தே அதன் உற்சாகத்தை பெற்றது என்பது தெளிவானது. அதற்குப் பிறகு அடுத்தடுத்து வந்த தலைமுறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு வங்காளதேஷியினதும் மனக்காட்சியை மொழி போராட்ட இயக்கமே வரையறை செய்தது.

கேள்வி : அறிவுப் பெருக்கத்துக்கு ஆங்கிலம் அத்தியாவசியம் என்று இலங்கையில் விவாதம் ஒன்று முண்டியிருக்கிறது. ஆங்கிலம் இல்லாதது ஒரு பெரிய இழப்பு என்று சீல வட்டாரங்களில் நம்பப்படுகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : ஆங்கிலம் மிகுந்த விசை ஆற்றல் உள்ள ஒரு மொழி. ஒக்ஸ்போர்ட் அகராதி ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான புதிய சொற்களையும் பதங்களையும் அதற்குள் சேர்த்துக் கொள்கிறது. ' தாய் மொழிக்கு எதிராக ஆங்கிலம் ' என்ற கருத்து நிலை தொடர்பாக விவாதங்கள் மூழுவது பொதுவானதே. தற்காலிகமானதும் அல்ல. அறிவு பெருக்கத்தில் ஆங்கிலம் ஒரு அத்தியாவசிய நிபந்தனையை அல்ல ஒரு தேவையான நிபந்தனையை நிறைவு செய்கிறது. ஒருவரின் தாய் மொழியை பாதிக்கக் கூடியதாக அவர் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.

நான் தாய் மொழியில் கல்வி கற்று வளர்ந்த ஒருவன். தரம் 12 வரை வங்காள மொழியே எனது போதனாமொழியாக இருந்தது. நான் மேற்கு நாடொன்றில் உள்ள பல்கலைகழகத்தில் சேர விரும்பினேன். கற்றலில் அவர்களது நுட்பங்களையும் கருவிகளையும் அனுபவிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் என்னால் அது முடியாமல் போய்விட்டது. இறுதியில் நான் ஒரு தெற்காசிய உற்பத்தியே. வட இந்தியாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு படிக்கச் சென்றேன். வங்காள மொழியிலுள்ள சிறந்த கவிதை மற்றும் இலக்கிய படைப்புக்களில் சிலவற்றை நான் வாசித்திருக்காவிட்டால் எனது மனக்காட்சி அல்லது சிந்தனைகள் எனது தாய் மொழியில் பிரவாகம் எடுப்பதைப் போன்று அமைந்திருக்காது.

அமெரிக்காவில் பிறந்த ஆசிய நாடொன்றின் மரபு மூலத்தைக் கொண்ட ஒருவர் இரவீந்திரநாத்தாகூர்  போன்றவர்களின் படைப்புக்களை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது காலத்தால் அழியாத படைப்பொன்றை அந்நிய மொழி ஒன்றில் ஏன் வாசிக்க வேண்டும் என்று தனக்குள் தானே கேட்டு அதை தன் தாய்மொழியில் வாசிக்க விரும்புவார். மேற்கு நாடொன்றில் பிறந்து வளர்ந்த ஆனால் அதே வேளை வாழ்வின் பிந்திய ஒரு கட்டத்தில் கூட தங்களது தாய் மொழியைப் படிக்க வேண்டும் என்ற அவாக் கொண்ட பலதை நாம் அறிந்திருக்கின்றோம்.

சம காலத்தில் தெற்காசியாவில் கூட இயல்பாகக் காணப்படுகின்ற பன்முகச்       சமூகம், சகல பிரிவினரையும் தழுவிய சமூகம் அல்லது பெருநகர சுற்றாடலில் வாழ்கின்ற நாம் மொழியின் படிமுறை வளர்ச்சியை மொழியியலாளர்கள் அல்லது கல்விமான்கள் அல்லது கவிஞர்களிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட வாளாதிருக்கக் கூடாது. தங்களது கருத்து வெளிப்பாடுகளின் ஊடாக எமது மொழிக்கு செழுமையூட்டிக் கொண்டிருக்கின்ற கிராமங்கள் பூராகவுமுள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பாணர்கள் செய்த முக்கியமான பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். நவீன இசைக் குழுவின் ஊடாக பெரும் பிரபல்யத்தைப் பெற்ற ஒரு பாடலின் மூல முதல் வரிகள் அடிப்படையில் படிப்பறிவில்லாத, முகமே தெரியாத கிராமப்புறத்து பாணர் ஒருவரால் இயற்றப்பட்டதை அடிக்கடி காண்கின்றோம்.

சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தாபகரான ஜக் மா 2018 ஆம் ஆண்டு உலக பொருளாதார மாநாட்டின் கூட்டத்தொடர் ஒன்றில் பேசிய போது பின்வருமாறு கூறினார். ' நான் இப்போது விஞ்ஞான , தொழிநுட்ப , பொருளியல் , கணித பட்டதாரிகளை எதிர்பார்க்கவில்லை. புதிய யுகத்தில் அலிபாபாவைப் பேணி பாதுகாப்பதற்கு தாராள போக்குடைய கலைப்பட்டதாரிகளையே தேடுகின்றேன். கலையின் அம்சங்களை சரியான முறையில் கொண்ட சேர்க்கை மாத்திரமே தொழிநுட்பத்தினால் ஊக்குவிக்கப்படுகின்ற முயற்சிகளை மேலும் உச்சங்களுக்கு கொண்டு செல்ல முடியும். மொழியிலிருந்தும் அதன் மரபுரிமையில் இருந்தும் வரவில்லையானால் கலை வேறெங்கிருந்து வரும்?

தற்பண்பு வாய்ந்த சிந்தனைகளும் படைப்பாற்றலும் இன்னொரு மொழியில் இருந்து வர முடியாது. ஜப்பான் , சீனா , ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்று கல்வியிலும் புத்தாக்கத்திலும் மிகவும் உயர்ந்த நி;லையில் இருக்கின்ற நாடுகள் இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விளங்கிக் கொண்டன. அதனால் அந்த நாடுகள் நீண்ட காலத்துக்கு முன்னரே தங்களது அடிப்படைக் கல்வியையும் பல்கலைக்கழக மட்டம் வரையிலான கல்வியையும் சொந்த தாய் மொழியில் கட்டமைத்தன.

( பைனான்சியல் ரைம்ஸ் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறைசேரி நிதி மோசடி: அரச நிர்வாக...

2026-05-15 07:02:31
news-image

வட்டுக்கோட்டை தீர்மானம், சர்வதேச சட்டம் :...

2026-05-14 17:30:47
news-image

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கான தேவைப்பாடு சமகாலத்தில் மேலோங்கியிருக்கிறது!

2026-05-14 17:14:34
news-image

தமிழ்த் தலைமைகள் பிணக்குகளை களைந்து ஓரணியில்...

2026-05-14 17:06:25
news-image

முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்

2026-05-14 16:59:05
news-image

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாற்றுப் பார்வை

2026-05-14 16:50:45
news-image

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 வருடங்களாகியும்...

2026-05-14 16:42:54
news-image

ஊழல் வழக்குகளைத் தொடர்வதில் உள்ள பாரிய...

2026-05-13 01:27:12
news-image

நவீன டிஜிட்டல் யுகத்தின் இரட்டைச் சகோதரர்கள்...

2026-05-12 17:44:33
news-image

தமிழ் அரசியலின் அடையாள அரசியலிலிருந்து மூலோபாயத்...

2026-05-12 12:57:49
news-image

ஈரான் மீதான நடவடிக்கைகள் உலகத்துக்கு பயனுள்ளது...

2026-05-11 11:37:52
news-image

‘இறந்தவர்கள் பேசுவதில்லை’ ஊழல் விசாரணைகளை முடக்கும்...

2026-05-10 17:09:05