கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் கட்டுநாயக்க மற்றும் ஜா-எலா வரையான பகுதிகள் சீதுவையிலுள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகை மண்டலம் காரணமாக அதிவேக வீதி மறுஅறிவித்தல் வரும் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 16 முதல் 25.8 கிலோமீற்றர் வரையிலான வீதியே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் ஜா-எல பரிமாற்றத்திலிருந்து வெளியேறும், அறிவுறுத்தப்பட்டுள்ளது,

காட்டுநாயக்கவிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைக்கு நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

தீயிலிருந்து வரும் புகை தற்போது அதிவேக வீதியின் பக்கம் சூழ்ந்துள்ளதால் அதைப்  சுவாசிப்பவர்களை பாதிக்கக்கூடும்  என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளார்கள்.