முகக் கவசங்களுடன் இருப்போர் அதனை அகற்றாவிடில் கைதுசெய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் :  துறைசார் மேற்பார்வை குழு 

Published By: R. Kalaichelvan

20 Feb, 2020 | 02:27 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புர்கா , நிகாப் போன்ற ஆடைகளை குறிப்பிட்டு தடை செய்வது ஓரினத்தை சுட்டிக்காட்டுவதாக இருப்பதனால் அப்பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக ஒருவரது முகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத மற்றும் சிரமமான முக மறைப்புக்கள் தலைக் கவசங்களை தடை செய்ய வேண்டுமென தேசிய பாதுகாப்பு பற்றி துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் இவ்வாறான முக மூடிகளுடன் இருப்போர் அதனை அகற்றாத பட்சத்தில் அவர்களை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தவிசாளர் மலிக் ஜயதிலக்கவினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் பெண்களின் ஆடை அணிதல் தொடர்பான பிரச்சினை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கை சமூகத்தில் முக்கிய பிரச்சினையாக காணப்பட்டது.

இந்த ஆடைகளில் புர்காவும் அபாயாவுமே பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றன. கண்ணியத்துடன் நடந்துகொள்ளும் முஸ்லிம் பெண்கள் தனது கணவரை தவிர்ந்த வேறு ஆண்களுக்கு தமது முகத்தை காட்ட விரும்பாமை காரணமாகவே இந்த ஆடைகளை அணிவதாக அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டாலும் இந்த புதுமாதிரியான அரேபிய ஆடைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த ஆடைகள் தொடர்பில் வெளிநாடுகள் பலவும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் பலவும் தடை விதித்துள்ளமையும் எம்மால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் 2019 ஏப்ரல் 30ஆம் திகதி ஜனாதிபதியின் அவசர சட்ட ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட 2121/1ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி பத்திரிகை மூலம் புர்கா , நிகாப் தடை செய்யப்பட்டது.

அத்தடன் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரினால் இவ்விடயம் தொடர்பில் பொது இடங்களில் முகத்தை மறைத்தலை தடை செய்தல் என்ற தலைப்பில் 2019.07.17 அன்று அமைச்சரவை பத்திரமொன்று சமர்பிக்கப்பட்ட போதும் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பினால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் உருவான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து தீவிர கவனம் செலுத்தியது. இந்த ஆடைகளுக்கு ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்ட போதும் அதனை நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் தடை செய்வதற்குரிய சட்டம் வகுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கமைய இத்தகைய முக மறைப்புகள் அணியப்படுவதை குற்றவியல் சட்டக் கோவைக்கு அமைய ஒரு குற்றமாக அறிவிப்பதற்கு ஏற்புடையதாக எடுக்க வேண்டி சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எமது குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய புர்கா , நிகாப் போன்ற பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக ஒருவரது முகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத மற்றும் சிரமமான முக மறைப்புகள் , தலைக் கவசங்களை தடை செய்தல் என குறிப்பிடுதல் பொறுத்தமானதென்ற கருத்து எமது குழுவில் முன்வைக்கப்பட்டது. புர்கா , நிகாப் என்று குறிப்பிடுவது ஓர் இனத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிடலாம் என்பதாலேயே இம்முடிவு எட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55