2020.02.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:

01. வருமானத்தின் அடிப்படையிலான வரி தொடர்பில் இரட்டை வரி முறையை தடுத்தல் மற்றும் வரி செலுத்துவதை தட்டிக்கழிப்பதை தடுப்பதற்காக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசாங்கத்திற்கும் செக்குடியரசு அரசாங்கத்திற்குமிடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை

இலங்கைக்கும் செக்குடியரசுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, வருமானத்தின் அடிப்படையிலான வரி தொடர்பில் இரட்டை வரியை தடுத்தல் மற்றும் வரி செலுத்துவதை தட்டிக்கழிப்பதை தடுப்பதற்கான உடன்படிக்கையொன்று அதிகாரிகள் மட்டத்தில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக அரசாங்க மட்டத்தில் இதனை கைச்சாத்திடுவதற்காகவும், 2017 ஆண்டு இலக்கம் 24 இன் கீழான உள்ளூர் இறைவரி சட்டத்தின் 75 (1) ஆம் சரத்திற்கமைவாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை அனுமதிப்பதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2020 ஆம் ஆண்டு முதல் தகுதிபெற்ற பயனாளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் உள்நுழைவதற்கான சந்தர்ப்பத்தை உறுதிசெய்தல்

2024 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்கான தகுதியை பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை 240,000 அளவில் அதிகரிக்கக்கூடும் என்று மதிபிடப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக 2020 கல்வி ஆண்டு முதல் உயர் தரத்தில் சித்தி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 

இதற்கமைவாக இந்த இலக்கை எட்டுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபார்சுகளை சமர்ப்பிப்பதற்கான கல்வி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய விடயங்களுக்கு உட்பட்ட புத்திஜீவிகளைக் கொண்ட விசேட குழு ஒன்றை அமைப்பதற்காக உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 2020 ஆம் ஆண்டு சிறு போகம் தொடக்கம் விவசாயிகளுக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டம்

உயர் தரத்தைக் கொண்ட சேதனப் பசளையை பயன்படுத்துவதற்காக விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான நடைமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் நடைமுறை ஒன்றை வகுப்பதற்காகவும் பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

தற்பொழுது இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் சேதனப் பசளைக்கான தரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேதன திரவ பசளை மற்றும் உயிரியல் உரத்துக்கான சம்பந்தப்பட்ட தரம் துரிதமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தற்பொழுது நாடு தளுவிய ரீதியில் சேதனப்பசளை தயாரிப்பில் சுமார் 250 உற்பத்தியாளர்கள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் 35 பேருக்கு தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை பயன்படுத்துவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் எதிர்ப்பார்ப்புடன் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் நெல் மற்றும் ஏனைய பயிர் உற்பத்திகளுக்காக இரசாயன உரத்திற்கு பதிலாக சுற்றாடலுக்கு பொருத்தமான உர வகைகளை முழுமையாக அல்லது சில வீதங்களுக்கு அமைய இரசாயன உரத்துடன் நிவாரண ரீதியில் இலவசமாக வழங்கும் முறை ஒன்றை தயாரித்து உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், உத்தேச திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களில் ஆகக்கூடிய வகையில் நான்கு போகங்களுக்கு இந்த உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயன்களை உறுதி செய்து அதன் பெறுபேறுக்கு அமைய இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் மகாவலி , விவசாய , நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. அலுமினிய பவுடரை இலங்கையில் இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல்

2003 ஆம் ஆண்டில் தனியார் துறையின் மூலம் அலுமினிய பவுடர் தேசிய ரீதியில் உற்பத்தி செய்வதற்கு முன்னர் இந்த நாட்டுக்கு தேவையான அலுமினிய பவுடர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் கீழ் இலங்கை அரச வணிக ( பல்வேறு) கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டது. இருப்பினும் அலுமினிய பவுடரை இறக்குமதி செய்வதில் உள்ள சட்ட பின்புலத்தில் தளர்வு ஏற்பட்டதுடன் தனியார் துறையினால் தேசிய ரீதியில் தயாரிக்கப்படாமல் அலுமினிய பவுடர் தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்படுவதினை கண்காணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சட்ட பின்புலத்தை வகுப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை அரசாங்கத்தின் வணிக (பல்வேறு) கூட்டுத்தாபனத்தின் மூலம் அலுமினிய பவுடரை இறக்குமதி செய்து, அனுமதி பத்திரம் பெற்ற பட்டாசு தயாரிப்பாளர்கள், அனுமதி பத்திரம் பெற்ற விநியோகஸ்தர்கள் மற்றும் அலுமினிய பவுடர் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு மாத்திரம் அவற்றை விநியோகிக்க கூடிய வகையில் அலுமினிய பவுடரை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகிப்பதற்கான முழுமையான அதிகாரம் இலங்கை அரச வணிக கூட்டுத்தாபனத்திடம் வழங்குவதற்காக உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05.வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி நிறுவனத்தை ஏலமிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள அமைச்சரவையின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்

உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாது மூடப்பட்டுள்ள அரச நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முக்கிய பணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தற்பொழுது உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத, மீள் கட்டமைப்புக்கான பாரிய அளவிலான அனைத்து அரச வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக தேசிய கடதாசி நிறுவனத்திற்கு உட்பட்ட தற்பொழுது தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள வாழைச்சேனை மற்றும் எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலைகளில் தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கான சாத்திய வளக்கூறுக்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிக்காக வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி நிறுவனம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது என்பதினால் இந்த நிறுவனத்தை ஏலமிடுதல் மற்றும் தற்பொழுது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சேவையை முடிவிற்கு கொண்டு வருவதற்காக சுயமாக ஓய்வூதிய இழப்பீட்டு ஆலோசனை முறை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. கிருலப்பனை, கொழம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 624 வீடுகளை கொண்ட திட்டத்தின் நிர்மாண பணிகளுக்கான திட்டத்தை வகுத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளுடனான குடியிருப்புகளில் வாழும் மக்களின் வீட்டுத்தேவைக்கு வசதி செய்யும் வகையில் நகர புனரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் மூலம் 200 மில்லியன் அமெரிக்க கடன் வசதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிதியில் ஒரு பகுதியை பயன்படுத்தி கிருலப்பனை , கொழம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 624 வீடமைப்பு திட்டத்தின் எஞ்சிய பணிகளை வகுத்து நிர்மாணிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிசிற்கமைய மாகா இன்ஜினியரிங் (தனியார்) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07.தொழில்நுட்ப நிறுவனத்தின் (ITI) மாலபேயில் அமைந்துள்ள நவீன ஆய்வு மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியில் (MRDC) அமைக்கப்படும் சீன - கூட்டு உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடம்

அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்திற்கு அமைய தொழில்நுட்ப நிறுவனம் (ITI) மற்றும் சீனாவில் யுனான் கிராமிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சேவை மத்திய நிலையத்திற்கு இடையில் புரிந்துணர்வுடன் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாலபேயில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆய்வு மற்றும் அபிவிருத்தியுடனான ஒன்றிணைந்த கூட்டு உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடம் ஒன்றை அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதன் தொழில்நுட்ப விஞ்ஞான கூடத்தை அமைப்பதற்காக மாலபேயில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆய்வு அபிவிருத்தி கட்டிடத்தில் கீழ் மாடியில் நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்த பணிகளுக்கான செலவை இரண்டு அரசாங்கங்களினால் பிரித்து கொள்ளும் அடிப்படையில் மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உத்தேச உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடத்தின் கீழ் மாடியில் நிர்மாணப் பணிகள் மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கான பெறுகை திணைக்களத்தின் பெறுகை குழுவின் சிபாரிசிற்கமைய M\s Prosperus Industrial Company (Pvt.) Ltd. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கும் இது தொடர்பில் இரு தரப்புக்கிடையில் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கும் உயர் கல்வி மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. உர பெறுகையை மேற்கொள்ளுதல் 2020 (மார்ச் மத்தி)

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிசிற்கு அமைய வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனத்திற்கும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்சல் நிறுவனத்திற்குமாக கீழ் குறிப்பிட்ட வகையில் உரத்தை கொள்வனவு செய்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• 47,700 மெற்றிக் தொன் யூரியா (கிரேனி யூலா) என்ற உரத்தை ஒரு மெற்றிக் தொன் 268.90 அமெரிக்க டொலர் என்ற வீதம் எக்றி வ்ர்டிலயிவன் இன்டர்நெசனல் டிரேடிங் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

• 15,000 மெற்றிக் தொன் ட்ரபிள் சுப்பர் பொஸ்பெற் என்ற உரத்தை ஒரு மெற்றிக் தொன் 262.74 அமெரிக்க டொலர் வீதம் கொள்வனவு செய்வதற்காக வெலன் சீ இன்டர்நெசனல் டிரேடிங் பிரைவட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

• 13,600 மெற்றிக் தொன் மியூரி செட் ஒப் பொட்டேஸ் என்ற உரத்தை ஒரு தொன் 317.25 அமெரிக்க டொலர் வீதம் எக்றி கொமடிட்டிஸ் என்ர பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

• வரையறுக்கப்பட்ட இலங்கையின் உர நிறுவனத்திற்காக 3060 யூரியா ( பிறில்டி) என்ற உரத்தை ஒரு மெற்றிக் தொன் 285.00 அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்வனவு செய்வதற்காக எக்றி கொமடிட்டிஸ் என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

09. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்ததில் சிவில் பணி ஒப்பந்த பொதி ஒன்றை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை மருதங்கேணி வீதி (B371) புனரமைத்தல் ஃ செப்பனிடுதல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தில் 4 ஆவது பொதி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிற்கமைய M\s NEM Construction (Pvt) Ltdஎன்ற நிறுவனத்திடம் 1684.81 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எரிசக்தி கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் - பொதி 1 இன் கீழான கெரவலப்பிட்டி 220kV Switching Station நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்

ஆசிய அபிவிருத்தி நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எரிசக்தி கட்டமைப்பு- வலுப்படுத்தும் திட்டம் - பொதி 1 இன் கீழான கெரவலப்பிட்டிய 220 kV Switching Station என்ற நிலையத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிசிற்கு அமைவாக M\s KEC Intertional Limited என்ற நிறுவனத்திடம் 2774.89 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டம் 2 இன் கீழான இரண்டாவது நடவடிக்கை ' அ பொதி'

2025 ஆம் ஆண்டளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் கையாளப்படும் வருடாந்த விமான பயணிகளின் எண்ணிக்கை 20 மில்லியன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதினால் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு விமான நிலையத்தில் பயணிகளுக்கான முனைக்கு அருகாமையில் செயற்பாடுகளை மேம்படுத்தும் பணிகளை தாமதம் இன்றி மேற்கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 2 ஆம் கட்டத்தின் இரண்டாவது நடவடிக்கை ' அ பொதிக்கான ஒப்பந்தம்' மொத்த பெறுமதி ஜப்பான் நாணயத்தில் 41,553.89 மில்லியன் ஜப்பான் யென்கள் மற்றும் இலங்கை நாணயம் 35.135 மில்லியன் ரூபாவிற்கு Taisei Corporation, என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. 50,000 தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டத்தை பெற்றவர்களை தொழில் வாய்ப்பில் ஈடுபடுத்துதல்

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டத்திற்கு சமமான தகுதியான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தகுதியை பூர்த்தி செய்துள்ள டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட 50,000 பேரை தொழில் வாய்ப்பில் ஈடுபடுத்துவதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் பயிற்சியளாருக்கான நியமன கடிதத்தை வழங்குதல் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள்ஃ மாவட்ட அரசாங்க அதிபர்களினால் மேற்கொள்ளுதல்.

• இந்த பயிற்சியாளர்கள் பயிற்சி கால வரையறுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்குள் இணைக்கப்பட்டு பயிற்சியை வழங்குதல்.

• ஒரு வருடம் திருப்தியான பயிற்சி காலத்தின் இறுதியில் இவர்கள் பணியாற்ற விருப்பத்தை தெரிவித்துள்ள கிராமிய பிரதேசத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரச சேவைக்கு உட்பட்ட நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளுதல்.

13. 2020 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசு

2020 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அறிவித்து அரசியல் யாப்பின் 154 ஜ. (07) சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றுவதற்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்;கப்பட்டுள்ளது.

14. இலங்கைப் பொலிஸ் மற்றும் விஷேட அதிரப்படையில் சேவையை கைவிட்டு செல்லும் உத்தரவை பெற்றுள்ள பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் சேவையில் நியமித்தல் (விடயதான இலக்கம் 57)

பொது மக்களினால் உத்தேச சேவைகளை வழங்குவதற்காக பயிற்சி படையணி ஒன்று இலங்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும். தற்பொழுது பொலிஸ் திணைக்களத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிடங்களின் எண்ணிக்கை இருப்பதுடன் இந்த வெற்றிடங்களுக்காக புதிதாக இணைத்துக்கொள்ளும் பணியை மேற்கொண்டு தேவையான பயிற்சியை வழங்கி சேவையில் ஈடுபடுத்துவதற்காக குறிப்பிடத்தக்க காலம் மற்றும் பாரிய செலவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் தற்பொழுது பொலிஸ் ஆரம்ப பயிற்சியை பெற்றுள்ள இருப்பினும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சேவையை கைவிட்டு செல்லும் உத்தரவை பெற்றுள்ள அனுபவமிக்க அதிகாரிகளை மீள பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக பொருத்தமான நடைமுறை ஒன்றை கடைப்பிடிப்பதன் மூலம் குறுகிய கால எல்லைக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோரை மீள சேவையில் ஈடுபடுத்த கூடியமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான மேன்முறையீடு குறிப்பிட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கப்படாமையின் அடிப்படையில் அதன் மேன்முறையீடு நிராகரிக்கபட்டுள்ள அதிகாரிகளின் மேன்முறையீடு தொடர்பில் முறையாகவும் நடைமுறைகளை முன்னெடுத்து மீண்டும் கவனத்தில் கொள்வதற்காக அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவின் சிபாரிசை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் இவ்வாறு சேவையை கைவிட்டு சென்றுள்ள அதிகாரிகளை மீள சேவையில் ஈடுபடுத்துவதற்கு மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15. திட்டம் அல்லாத நன்கொடை நிதி உதவியின் கீழ் ஜப்பான் போதைப்பொருள் ஒழிப்பு பணிகளுக்காக 320 மில்லியன் ரூபா ( ஜப்பான் யென் 200 மில்லியன்) நன்கொடை உதவி - 2020

கடந்த காலத்தில் இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் அதிகரித்தமை நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினையாக அமைந்துள்ளதினால் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பாரியளவில் போதைப்பொருளை வாகனங்களில் எடுத்து செல்வோர் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்துவோரை அடையாளம் காண்பதற்கு தேவையான நவீன உபகரணங்களை வழங்குவது அத்தியாவசியமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், போதைப்பொருளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை விசாரித்தல் மற்றும் கண்டறிவதற்காக தேவையான உபகரணங்களை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்காக 200 மில்லியன் யென்கள்( 320 மில்லியன் ரூபா வரையில்) வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவான ஆவணங்களில் கைச்சாத்திடுவதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. 23 முக்கியத்துவமிக்க பாலங்களை வழங்குதல் மற்றும் பொருத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அனுமதியை பெற்றுக்கொள்ளுதல் - பிரான்சின் M\s Ellipse Projects SAS என்ற நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனை

வாகன நெரிசல், வாகன விபத்து மற்றும் அதிகரிக்கும் வாகன நடவடிக்கை செலவுகளை குறைக்கும் நோக்கத்தை கொண்ட முக்கியத்துவமிக்க 23 பாலங்களை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கி பொருத்துவதற்கு பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக பிரான்சின் M\s Ellipse Projects SAS என்ற நிறுவனத்தினால் ஆலோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பரிந்துரையை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கும் வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. இலங்கையில் உத்தேச அதிவேக வீதி வலைப்பின்னலை நிர்மாணிக்கும் நடைமுறையை முன்னெடுத்தல்

முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் கீழ் குறிப்பிட்ட வகையில் அதிவேக நெடுஞ்சாலை வலைப்பின்னலை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

• மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் - கடவத்தை - மீறிகம, மீறிகம - குருநாகல், பொத்துஹெர - கலகெதர மற்றும் குருநாகல் - தமபுள்ள என்ற ரீதியில் 4 கட்டங்களின் நிர்மாணப்பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துதல்.

• ருவான்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கஹடுவ - இங்கிரிய, இங்கிரிய - இரத்தினபுரி மற்றும் இரத்தினபுரி – பெல்மதுல்ல என்ற ரீதியில் மூன்று பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்துதல்.

• கிழக்கில் அதிவேக வீதி திட்டம் மத்தள விமான நிலையத்தில் இருந்து வெல்லாவய மற்றும் சியம்பலாண்டுவ ஊடாக பொத்துவில் பிரதேசத்தை தொடர்புபடுத்துவதை நடைமுறைப்படுத்துதல்.

இதற்கமைவாக மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்காகவும், ருவான்புர அதிவேக நெடுஞ்சாலையில் i பிரிவிற்கான ஆலோசனை ஒன்று M/s CNTIC என்ற நிறுவனத்திடம் பெற்றுக்கொள்வதற்காகவும், இந்த திட்டத்தின் 2 பிரிவை நிர்மாணிப்பதற்கான போட்டி தன்மை அடிப்படையிலான கேள்வி மனுக்களை கோருவதற்காகவும் , கிழக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கான சாத்தியவள கூற அறிக்கையை மேற்கொள்வதற்கும் நிர்மாணப்பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு வள திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18. பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுதல்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த விமான நிலையத்தில் இருந்து பிராந்திய சர்வதேச விமான பயணங்களை முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒத்துழைப்பு தெரிவித்து இந்திய அரசாங்கத்தினால் இலங்கை நாணயத்தில் 300 மில்லியின் ரூபாவை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முனை( டேர்மினல்) மாற்றுதல், மின்சக்தி விநியோகம் பயன்பாட்டு சேவை மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

19.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 / 1 இன் கீழான ' இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டை முன்னெடுத்தல் '

நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்ட தொடரில் இலங்கை அரசாங்கத்தின் அணுகல் தொடர்பில் கீழ் குறிப்பிடப்பட்டவற்றை மேற்கொள்வதற்கும், இதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேவையான இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இல 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம் இலக்கம் 34/1 ஆகிய அறிமுக பிரேணை உரை நிறைவேற்றப்பட்டு உள்ளடக்கப்பட்ட போதிலும் அவற்றின் அடிப்படையிலான இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு ஆகிய கருப்பொருளை கொண்ட 2019 மார்ச் மாதம் இலக்கம் 40 / 1 இன் கீழான ஆலோசனை நிறைவேற்றலில் ஏதேனும் அனுசரனையில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அறிவித்தல்.

நிரந்தர மனித உரிமை விதிமுறை உத்தரவு ஃ சபை மற்றும் பொறி உள்ளிட்ட , ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் பிரதிநிதியுடன் தொடர்ச்சியாக செயற்படுதல் மற்றும் அவர்களின் தேசிய முக்கியத்துவம் மற்றும் கொள்கைக்கு அமைவாக தேவையான வகையில், செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுதல்

• அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பை கடைப்பிடித்து, தற்பொழுது முன்னெடுக்கப்படும் பொறி ஏற்றவகையில் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கம், தேசிய ரீதியில் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் நிலையான சமாதானத்தை அடைவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அறிவித்தல். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுதல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்த முழுமையான இலங்கையின் அறிக்கையை மதிப்பீடு செய்தற்கும், அவற்றின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதிலான முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நடைமுறைப்படுத்தக்கூடிய நடவடிக்கை ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் உயர் நீதிமன்றத்தின் நீதியரசரின் கீழ் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்.

• 2030 ஆம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் ஆவணத்தில் உள்ளடங்கிய இலங்கை கொண்டுள்ள கடப்பாட்டுக்கு பொருத்தமான வகையில் , சரியான ஜனநாயக மற்றும் உடனடி நடவடிக்கையின் ஊடாக, இது வரையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தேவையான நிறுவனத்திற்கான மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துதல். சட்டத்தின் கீழ் நபர்கள் மற்றும் இணக்கப்பாட்டு உரிமைகள் போன்று பாதுகாப்பில் முன்னேற்றத்தை மேற்கொள்வதற்கும், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகத்தில் உள்ள விபத்திற்கு உட்படக்கூடிய பிரிவுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் , பொது மக்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பில் வெளிப்பட்டுள்ள கொள்கையை பிரகடனப்படுத்துதல்.

• ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் பிரேரணையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கையை மேற்கொள்வதில் இலங்கை அரசாங்கத்தில் உள்ள கடப்பாட்டைவெளிப்படுத்துதல்.

- அரசாங்க தகவல் திணைக்களம்