கணினிகள் மற்றும் கைத்தொலைபேசி சாதனங்களைப் பயன்படுத்துவதை எளிமையாக  கையாள காரண கர்த்தவான கணினி விஞ்ஞானி லாரி டெஸ்லர் தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவர் செய்த பங்களிப்புகள் நவீன கணினியின் நீண்ட கால வளர்ச்சிக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளது.

இவர் 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் பிறந்தார். அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலைப் படித்தார், பட்டம் பெற்ற பிறகு அவர் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  

1973 ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் (PARC) விஞ்ஞானியான டெஸ்லர் பணிபுரிந்தார். 

இப்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் டெஸ்லர் டிம் மோட்டுடன் இணைந்து ஜிப்சி என்ற சொல் செயலியை உருவாக்கினார்,

இது உரையை  "வெட்டுதல்," "நகலெடுத்தல்" மற்றும் "ஒட்டுதல்" ( “cut,” “copy,” and “paste” ) என்ற சொற்களை உருவாக்குவதற்கு மிகவும் பிரபலமானது, இது உரையின் பகுதிகளை  அகற்றுதல், நகல் செய்தல் அல்லது இடமாற்றம் செய்வதற்கு வழிவகுத்தது.

ஜெராக்ஸ் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றுக்கு அவர் மேற்கொண்ட பணிகளின் ஒரு பகுதியாக நவீன கணினியின் வளர்ச்சிக்கு டெஸ்லர் அளித்த எண்ணற்ற பிற பங்களிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன, அவை ஒருபோதும் வெளிச்சத்திற்கு வரவில்லை. கணினியை ஆராய்ச்சி மையங்களிலிருந்து வீடுகளுக்கு மாற்றுவதற்கு டெஸ்லர் ஒரு முக்கிய காரணமான இருந்தார் எனவே சொல்லலாம்.