பதுளை மாநகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மாணவர்களின் ஒழுக்கம் குறித்து இடம்பெற்ற வாக்குவாதங்கள் முற்றவே மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதல்களில் ஈடுபட்டனர். இம்மோதலில் ஐவர் காயங்களுக்குள்ளானர்.

பதுளைப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பான புகார் பதியப்பட்டுள்ள நிலையில் இது குறித்துக் குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது,  இந்த சம்பவம் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக மாத்திரம் தெரிவித்தார்.