கனடாவின் கியூபெக்கில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்பது பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

கியூபெக்கின் மாண்ட்ரீலுக்கு வெளியே அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினைத் தொடர்ந்து சுமார் 100 பேர் மூன்று வைத்தியசாலைகளுக்கு அம்புயூலன்ஸ் வண்டியின் மூலமாக கொண்டு சேர்க்கப்பட்டுளளனர். 

இவர்களுள் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கியூபெக்கின் பொது பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குறித்த பகுதியில் நிகழும் வலுவான பனிப்பொழிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கியூபெக் போக்குவரத்து அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.