அர­சியல் தீர்வு குறித்து கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்­துக்கு ஒரு­போதும் அழுத்தம் பிர­யோ­கிக்க முடி­யாது. அர­சியல் தீர்வை வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டு ஜனா­தி­பதி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டற்ற தீர்­மா­னங்­களை மாத்­தி­ரமே முன்­னெ­டுப்போம் என்று அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தரும் தகவல் மற்றும் தொடர்­பாடல் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான லக்ஸ்மன் யாப்பா அப­ய­வர்த்தன தெரி­வித்­துள்ளார்.

புலம்­பெயர் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் நோக்­கங்­களை நிறை­வேற்­று­வ­தற்காகவே ­சம்­ப­ந்தனும் சுமந்­தி­ரனும் அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றார்கள். இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா விவ­கா­ரத்தில் இவர்கள் குறிப்­பிடும் கருத்­துகள் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை என்றும் அவர் கருத்து தெரி­வித்­துள்ளார்.  

ஊடக அமைச்சில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.  

இரா­ஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அப­ய­வர்­த்த­னவின் கருத்­தா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பதை தெளி­வாக எடுத்­துக்­கூ­று­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மைகள் அர­சியல் தீர்வு தொடர்­பிலும் பொறுப்புக்கூறலின் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். சர்­வ­தேச பிர­தி­நி­தி­களை சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் அவர்கள் எடுத்­துக்­கூறி வரு­கின்­றனர்.

இந்­த­நி­லை­யில்தான் அர­சியல் தீர்வு குறித்து கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்­துக்கு ஒரு­போதும் அழுத்தம் பிர­யோ­கிக்க முடி­யாது என்றும் அர­சியல் தீர்வை வழங்­க­ுவ­தாக குறிப்­பிட்டு ஜனா­த­ிபதி ஆட்­சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை என்றும் இரா­ஜாங்க அமைச்சர் லக்ஸ்­மன் யாப்பா அப­ய­வர்­த்தன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சியல் தீர்வு தொடர்பில் தாம் எந்­த­வித உறு­தி­மொ­ழி­யையும் வழங்­க­வில்லை என்­ப­தனால் அது­கு­றித்த அழுத்­தங்­களை கூட்­ட­மைப்பு வழங்க முடி­யாது என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்ற ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் அக்­க­றை­யற்ற தன்­மை­யையே தொடர்ச்­சி­யாக வெளிக்­காட்டி வரு­கின்­றது. ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர்  இந்­தி­ய­ாவுக்கு விஜயம் செய்­தி­ருந்த கோத்­த­பாய ராஜபக் ஷ இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­ மோ­டியை சந்­தித்து பேசி­யி­ருந்தார். அப்­போது 13ஆவது திருத்தச் சட்­டத்தின் முழு­மை­யான அமு­லாக்கம் தொடர்பில் இந்­தியப் பிர­தமர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்த விஜ­யத்­தின்­போது இந்­தியப் பத்­தி­ரி­கை­களுக்கு அளித்த செவ்­வியில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ 13ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள சகல விட­யங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது கடி­ன­மா­னது என்ற சாரப்­பட கருத்து தெரி­வித்­திருந்தார். அத்­துடன் பெரும்­பான்­மை­யின மக்கள் விரும்­பாத எந்த விட­யத்­தையும் இலங்­கையில் அமுல்­ப­டுத்த முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதே­போன்றே அண்­மையில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்­பின்­போதும் இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு சமத்­துவம், நீதி வழங்­கக்­கூ­டிய அர­சியல் தீர்வின் அவ­சி­யத்தை இந்­தியப் பிர­தமர் வல­ியு­று­த்­தி­யி­ருந்தார். ஆனாலும் அங்கு பத்­தி­ரி­கை­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தி­ருந்த பிர­தமர் மஹிந்த ராஜ

பக் ஷ 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் விடயம் தொடர்பில் மாறு­பட்ட கருத்­து­க­ளையே தெரி­வித்­தி­ருந்தார்.

நாட்டில் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வதன் மூலம் சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வைக் காணலாம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அர­சாங்கம் இருந்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்­சர்­களின் கருத்­துகள் இத­னையே பறை­சாற்­று­வ­தாக அமைந்தி­ருக்­கின்­றன.

அர­சியல் தீர்வு விட­யத்­திலும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விவ­கா­ரத்­திலும் பொறுப்­புக்கூறும் விட­யத்­திலும் அர­சாங்கம் அக்­க­றை­யின்றி செயற்­ப­டு­கின்­ற­மை­யி­னா­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் அர­சியல் கட்­சிகள் இந்த விட­யங்­க­ளுக்­கான தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி வரு­கி­ன்றன.

கடந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் அர­­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு அமை­க்­கப்­பட்டு அர­சியல் தீர்வு தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது. புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் அர­சியல் தீர்வு தொடர்­பிலும் குறிப்­பி­டப்­ப­ட்­டி­ருந்­தது. இவ­்வாறு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் தமிழ் தேசியக் கூட­்­ட­மைப்­பா­னது அன்று விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளு­டன் செயற்பட்­டி­ருந்­தது. நல்­லாட்சி அர­சாங்க கால­த்­திலும் அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் கட்­சிகள் வலி­யு­றுத்­தியே வந்­தன.

தற்­போது அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் தடைப்­பட்­டுள்­ள­மை­யினால் அதனை மீள ஆரம்­பிக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவே தமிழ் கட்­சிகள் அழுத்­தங்­களை கொடுத்து வரு­கின்­றன. ஆனால், அவ்­வா­றான அழுத்­தங்­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­யோ­கிக்க முடி­யாது என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அப­ய­வர்­த்தன தெரி­விப்­பது தவ­றான செயற்­பா­டாகும். அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண உரிய நட­வ­டிக்­கைகள் எடுத்­த­ிருந்தால் இத்­த­கைய அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கோ அல்­லது ஏனைய தமிழ் கட்­சி­க­ளுக்கோ ஏற்­பட்­டி­ருக்க மாட்­டாது.  

நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் அர­சியல் தீர்வு தொடர்­பி­லும் பொறுப்­புக்­கூறும் விட­யத்­திலும் உரிய அழுத்­தங்­களை கூட்­ட­மைப்பு கொடுக்­க­வில்லை என்று ஏனைய தமிழ் கட்­சி­களால் குற்றம் சாட்­டப்­பட்­டது. அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­ுவ­தாக கூட்­ட­மைப்பின் மீது அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மா­கவே முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் இணைத்­த­லை­மையில் தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் பேர­வை­யா­னது தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்­வு­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தது. அத்­துடன் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்வு தொடர்­பான திட்ட வரை­பையும் அர­சியல் யாப்பு சபைக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அன்று அர­சியல் தீர்வு காண விட்­டுக்­கொ­டுப்­புடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­ட­போ­திலும் தமிழ் மக்கள் மத்­தியில் அதி­ருப்தி நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. ஏனெனில், நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் துரி­த­க­தியில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு மேலெ­ழுந்­தி­ருந்­த­மையே இதற்கு கார­ண­மாக அமைந்­தி­ரு­ந்­தது.

ஆனால், தற்­போது அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் முற்­று­முழு­தாக தடைப்­பட்­டுள்ள நிலையில் கூட்­ட­மைப்­பா­னது எவ்­வாறு அழுத்­தங்­களை கொடுக்­காமல் இருக்க முடியும்? இந்த விட­யத்தை அர­சாங்கம் நன்கு சிந்­தித்து பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

யுத்தம் முடி­­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட்­டதன் பின்னர் நடை­பெற்ற சகல தேர்­தல்­க­ளிலும் தமிழ் மக்கள் அதி­காரப் பகிர்வின் அவ­சியம் கரு­தியும் தமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை நோக்­காகக் கொண்­டுமே வாக்­க­ளித்து வந்­த­னர். கடந்த ஜனா­தி­பதித் தேர்தலிலும் இத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர்கள் வாக்­களித்­தி­ருந்­தனர்.

இந்­த ­நிலையில் தமிழ் மக்­களின் மனங்­களை வென்று அவ­ர­்களும் இந்­நாட்டுப் பிர­ஜைகள்தான் என்று உண­ரும்­ வ­கையில் அர­சாங்கம் செயற்­ப­ட­வேண்­டு­மானால் அவர்­க­ளது பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டி­யது அவசி­ய­மா­ன­தாகும். இதனை விடுத்து அர­சியல் தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறுவதானது இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடாகவே அமையும்.

நாடு தற்போது பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் இலங்கையில் சகல சமூகத்தினர் மத்தியிலும் நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்படவேண்டியது அவசியமான­தாகும். இவ்வாறான நிலை ஏற்பட வேண்டுமானால் சகல மக்களையும் சமனாக மதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்­பட வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் வகையில் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்வதானது வெறும் தேர்தல் வெற்றிக்கு உதவுமே தவிர நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்தமாட்டாது.

எனவே, தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதை விடுத்து அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(20.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )