கழிவறைக்குள் வந்த வெளிச்சத்தால் சந்தேகித்த மாணவி: குழாய் துளையில் வீடியோ எடுத்த பேராசிரியர் சிக்கினார்

Published By: Digital Desk 8

20 Feb, 2020 | 12:27 PM
image

இந்தியாவின் சென்னையில் பெண்களின் கழிவறைப்பகுதிகளின் இரகசியமாக காணொளி எடுத்த பேராசிரியர் சிக்கியுள்ளார்.

 சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இரவில் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சியில் இருந்த மாணவி ஒருவர் அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென கழிவறைக்குள் சிறிய அளவிலான வெளிச்சம் தென்பட்டதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியை பார்த்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது கழிவறையின் வெளியில் இருந்து தண்ணீர் குழாயையொட்டி இருந்த சிறிய துளை வழியாக கைபேசியில் ஒருவர் வீடியோ எடுப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மறுபுறம் கைபேசியில் படம் பிடித்த வாலிபர் யார்? என பார்த்த போது அவர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர் என தெரியவந்துள்ளது.

இவ்வி‌டயம் ஐ.ஐ.டி. வளாகத்தில் காட்டு தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த பேராசிரியரின் கைபேசியை சோதனையிட்ட போது, மாணவியின் ஆபாச வீடியோ இருந்தது. உடனடியாக இதுபற்றி பொலிஸாருக்கு தெரிபடுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரான பேராசிரியரை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

மேலும் சந்தேக நபர், பல மாதங்களாகவே ஆய்வக கழிவறையில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளமை கைபேசி வாயிலாக தெரியவந்துள்ளது. அத்தோடு இன்னுமு் பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளமையால், அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர். 

இவ்விவகாரம், குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான...

2026-04-15 00:17:32
news-image

பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஈரானின் முடிவில்...

2026-04-14 20:02:09
news-image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான்...

2026-04-14 19:43:12
news-image

துருக்கியில் பாடசாலையொன்றின் பழைய மாணவன் நடத்திய...

2026-04-14 18:01:39
news-image

எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க...

2026-04-14 13:09:42
news-image

தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நூதன முறையில்...

2026-04-14 14:25:00
news-image

சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே அமெரிக்காவுடன்...

2026-04-14 11:52:50
news-image

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை...

2026-04-14 11:52:31
news-image

மீண்டும் போர் தொடங்கக்கூடாது: ஈரானுக்கு ரஷ்ய...

2026-04-14 04:41:27
news-image

ஹார்முஸ் மீது அமெரிக்கா முற்றுகையிட்டதை அடுத்து...

2026-04-14 04:35:42
news-image

ஹோர்முஸ் கிழக்கு கடற்பரப்பில் கப்பல்களுக்கு முற்றுகை...

2026-04-13 20:49:52
news-image

நைஜீரிய விமானப்படைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட...

2026-04-13 16:24:21