பிரேரணையில் இருந்து விலகுவதாக 26 ஆம் திகதி ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் தினேஷ்  

20 Feb, 2020 | 05:51 PM
image

(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும்  24 ஆம் திகதி  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் 26 ஆம் திகதி புதன்கிழமை இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேரவையில் உரையாற்றவுள்ளார்.

ஜெனிவா நேரப்படி காலை  10.20 க்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன   மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன்  நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையிலிருந்து (தற்போது 40–1 என்று மாற்றப்பட்டுள்ளது) முழுமையாக வெ ளியேறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில்   அது தொடர்பாக  அன்றைய தினம்  அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  உததியோகபூர்வமாக அறிவிப்பார்.  

ஜெனிவா கூட்டத்  தொடர் ஆரம்பமானதும்  முதல் மூன்று நாட்களுக்கு பொதுவான விவாதம் நடைபெறும்.  அதில்  சர்வதேச நாடுகளின்   வெ ளிவிவகார அமைச்சர்கள் மனித உரிமை அமைச்சர்கள் சர்வதேச உறவுகள் அமைச்சர்கள் உரையாற்றுவது வழக்கமாகும்.  

அதனடிப்படையிலேயே  எதிர்வரும் 26 ஆம் திகதி  இலங்கையின் சார்பில் வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவுள்ளதுடன்  இலங்கையின் நிலைப்பாட்டையும் அறிவிக்கவுள்ளார்.   இலங்கையானது ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.  

 இந்த நிலையிலேயே  அந்த தீர்மானத்தை  வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன எதிர்வரும்  26  ஆம் திகதி ஜெனிவாவில் அறிவிக்கவுள்ளார்.  

ஜெனிவா பிரேரணை  தொடர்பாக   வெளிவிவகார  அமைச்சினால் மீளாய்வு  செய்யப்பட்டு வந்த நிலையில்     பிரேரணையிலிருந்து     விலகுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை  இரவு  இது  தொடர்பில் முக்கிய  கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.    இதில் ஜனாதிபதி  தலைமையில்  வெ ளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.  

இதன்போது இராணுவ தளபதிக்கு எதிராக  அமெரிக்காவினால்  விதிக்கப்பட்டுள்ள  பயண தடை மற்றும்   2015 ஆம் ஆண்டில் கடந்த   முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன்  நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணை குறித்த மீளாய்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.  அத்துடன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.  

இதன்போதே பிரேரணையிலிருந்து  விலகுவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத்  தொடர்  எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது    

ஐக்கியநாடுகள் மனித  உரிமை பேரவையின்  43 ஆவது கூட்டத் தொடர்   24ஆம் திகதி முதல்   மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை   நடைபெறவுள்ள நிலையில்   இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்டின் அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி  மாதம்  27 ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

பெப்ரவரி  மாதம்  27 ஆம் திகதி  பிற்பகல் வேளையில்   ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்  இலங்கை குறித்த அறிக்கையை  சமர்ப்பிக்கவுள்ள நிலையில்  அதன் பின்னர்   விவாதம் நடைபெறும்.  இதன்போது  இலஙகையி்ன் சார்பில் விவாதத்தில்   தூதுக்குழுவினர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.  

கடந்த  2015 ஆம் ஆண்டு  இலங்கை குறித்த  30-1 என்ற  பிரேரணை  ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்டது. அதற்கு  அப்போதைய இலங்கை  அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது 2017 ஆம் ஆண்டாகும்போது இந்த பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என்று  அதில் கோரப்பட்டிருந்தது.

எனினும் அக்காலப்பகுதியில்  பிரேரணை  முழுமையாக நிறைவேறாததன் காரணமாக   2017 ஆம் ஆண்டு   30-1 என்ற பிரேரணை      மேலும் இரண்டு வருடங்களுக்கு நிறைவேற்றப்பட்டது.   அது 34-1 என்ற பிரேரணை ஊடாக முன்னெடுக்கப்பட்டது.   2019 ஆம் ஆண்டாகும்போது 30-1 என்ற பிரேரணையை  முழுமையாக அமுலாக்கவேண்டும் என்று  தெரிவித்தே  34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற  பிரேரணை  முழுமையாக  நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது  ஆரம்பத்தில்  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே  தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right