இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக இந்தியன் -2 படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘Horrific accident’: 3 killed, 10 injured after crane collapses on ‘Indian 2’ movie set (PHOTOS)

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் -2 படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்று வருகின்றது.

சென்னையில் அமைந்துள்ள இ.வி.பி.ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு வேலைகள் இடம்பெற்று வந்தன.

Image

இந்நிலையில் நேற்று இரவு குறித்த படிப்பிடிப்பின் போது கிரைன் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் இந்தியன்-2 படத் தயாரிப்பாளர் ஷங்கரும் படுகாயமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

Image

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ``எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியைவிட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தனது வருத்ததை பதிவு செய்திருந்தார் 

குறித்த விபத்தில் இந்தியன்-2 படத்தின் இயக்குனர் ஷங்கரும் படுகாயமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Image