மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனானா மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணிக்கு லசித் மலிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்க தலைமையிலான இலங்கை இருபதக்கு - 20 கிரிக்கெட் அணியானது இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுடானான இருபதுக்கு : 20 தொடர்களில் மோசமான தோல்வியை சந்திதிருந்தது. இதன் பின்னர் இருபதுக்கு : 20 போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியை மாற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பரீசிலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையிலேயே மலிங்க மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனானா இருபதுக்கு - 20 தொடருக்கு இலங்கை அணித் தலைவராக செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவன் அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மலிங்க, நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடவுள்ளோம். போட்டியை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆகவே எங்கள் அனைவருக்கும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டி முடிவடைந்ததும், இலங்கை இருபதுக்கு - 20 தொடருக்கான அணி அறிவிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Schedule :

Feb 17 – Warmup Match – P. Sara Oval, Colombo

Feb 20 – Practise Match vs SLC Board President’s XI – Chilaw Marians Ground, Katunayake

Feb 22 – 1st ODI – Sinhalese Sports Club, Colombo

Feb 26 – 2nd ODI (D/N) – Mahinda Rajapaksa International Stadium, Hambantota

Mar 1 – 3rd ODI (D/N) – Pallekele International Stadium, Kandy

Mar 4 – 1st T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy

Mar 6 – 2nd T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy