இந்தியா, திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இன்று அதிகாலை (20.02.2020) ஏற்பட்ட வீதி விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேற்படி விபத்து, பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தின் மீது கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற லொரியொன்று நேருக்குநேர் மோதியதால்  ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.