ஈரானுடன் எந் நேரத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராகவுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தார்.

நடத்தையின் அடிப்படையில் மாற்றம் தேவை, அவ்வாறு இல்லையெனில் அழுத்தம் பிறகியோக்கிக்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வொசிங்டனில் முக்கிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சொலைமானி அமெரிக்காவின் ஆழில்லா விமானங்கள் மூலம் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அத்தோடு இரு நாடுகளுக்குமான பற்றம் அதிகரித்து இருந்தது.

இத் தாக்குதலுக்கு சரியான தருணத்தில் ஈரான் பதிலடி கொடுக்கும் என ஈரான் இராணுவத்தின் புதிய தளபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகனை தாக்குல்கள் நடத்தியது.

இதில் அமெரிக்க இராணுவத்தினருக்கு மூளைக்காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையிலேயே அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்  மைக் பொம்பியோ ஈரானுடன் எந்தநேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.