இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு    எதிராக  கொண்டுவரப்பட்ட பிரேரனையில் இருந்து விலகிக்   கொள்வதற்கு  அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு    அமைச்சரவை  பூரண அங்கிகாரம் வழங்கியுள்ளது. நாட்டின்   இறையாண்மைக்கு  பாதிப்பினை ஏற்படுத்தும்  தீர்மானங்களுக்கு ஒருபோதும் அனுசரணை வழங்க முடியாது என  அமைச்சரவை    பேச்சாளர்    பந்துல  குணவர்தன   தெரிவித்தார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில்  இன்று வியாழக்கிழமை  இடம் பெற்ற   அமைச்சரவை  தீர்மானங்களை  அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள்   மனித  உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத்தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஜெனிவாவில்  ஆரம்பமாகவுள்ளது.   இலங்கைக்கு எதிராக     கொண்டு வரப்பட்ட  தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு  மனித உரிமை பேரவை   இலங்கையின்  பல  விடயங்களில் தொடர்ந்து    அழுத்தம் பிரயோகித்தும், எதிர்ப்பினை   வெளிப்படுத்தி  வந்ததையும்     குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு  எதிராக   ஐக்கிய   அமெரிக்கா மற்றும் உறுப்பு  நாடுகள் ஒன்றினைந்து  2015ம் ஆண்டு கொண்டு வந்த  பிரேரணைக்கு  நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை  வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 30. 1 மற்றும் 34.1    ஆகிய  இரு   பிரேரணைகளும் இலங்கைக்கு எதிராகவே  கொண்டு வரப்பட்டன.    இவ்விரு  பிரேரணைகளிலும் இருந்து  விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை  பெரும்பான்மை  மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகவே  காணப்பட்டன.  நல்லாட்சி அரசாங்கத்தின்  செயற்பாடுகள் பல்வேறு   தரப்பினராலும் கடுமையான  விமர்சனத்திற்குற்பட்டன.

 2015ம் ஆண்டு  ஆட்சி  மாற்றத்தை  தொடர்ந்து     நல்லாட்சி  அரசாங்கம்  மேற்குலக  நாடுகளின் தேவைகளுக்காக செயற்பட்டது.  இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட   இரண்டு  பிரதான பிரேரணைகளுக்கும்  அப்போதைய  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிற்கும்,   பாராளுமன்றத்திற்கும்  அறிவிக்காமல் அரசாங்கம் இணையனுசரனை  வழங்குவதாக  இணக்கம் தெரிவித்தார்.    இவரது முறையற்ற செயற்பாடுகளே  இன்று  பல நெருக்கடிகளை   தோற்றுவித்துள்ளது.

நிறைவேற்றப்பட்ட  பிரேரணைகள்  இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு  முரணானது என்ற  காரணத்தினால் ஆரம்பத்தில்( 2015)   இருந்து கடுமையான  எதிர்ப்பினை  வெளிப்படுத்தினோம்.  இன்றும் அதன் நிலைப்பாட்டில் எவ்வத மாற்றமும்   கிடையாது.   பிரேரணையில் இருந்து    விலகிக் கொள்வதற்கு    அரசாங்கம்    தீர்மானித்ததற்கு  பல  காரணிகள்  செல்வாக்க செலுத்துகின்றன.

ஜெனிவா  பிரேரணையில் இருந்து அரசாங்கம்  விலகிக்க கொள்ள எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை முழுமையான அங்கிகாரம் வழங்கியுள்ளது.         ஐக்கிய  நாடுகள் மனித  உரிமை பேரவையின் உறுப்பு  நாடுகளின்  ஆதரவுடன்     பிரேரணையில் இருந்து  விலகிக் கொள்வோம். இதனால்    சர்வதேச  உறவுகளுக்க எவ்வித  பாதிப்பும் ஏற்படாது என்றார்.