யோகோகாமாவில் இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இருவரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 84  87 வயதான நபர் ஒருவரும் மற்றும் 84 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக த கார்டியன் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் ஜப்பானில் தற்போது கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் தொகையானது மூன்றாக பதிவாகியுள்ளது.

இரு வார தனிமைப்படுத்தலின் பின்னர் பயணிகள் கப்பலிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக் கப்பலில் பயணித்த 624 பேர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளதாக சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN