(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்படவுள்ள சின்னம் மற்றும் கூட்டணி உள்ளிட்ட ஏனைய சகல பிரச்சிளைகளுக்கு இம் மாத இறுதிக்குள் தீர்வு காணுமாறு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட இந்த ஆலோசனைக்கு அமைய அடுத்த வாரத்துக்குள் சின்னம் மற்றும் புதிய கூட்டணியின் பெயர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியின் சின்னம் தொடர்பில் பிரச்சினைகள் ஆரம்பமான போதே தான் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கியுள்ளதாக இன்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.