தேங்காய் ஒன்றின் விலையை 65 ரூபாவுக்கு விற்பனைசெய்வதற்கு வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி தேங்காய் ஒன்றின் விலையை 65 ரூபாவிற்கு ச.தொ.ச. விற்பனை நிலையத்தின் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெங்கு உற்பத்தி தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு இலாப நோக்கத்துடன் சிறந்த விலையில், வழங்குவதே இதன் நோக்கமாகும் என வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விலை 45 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.