வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடை பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர். வீட்டிலுள்ள அனைவரும் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுண் தங்க நகைகள், 400 ஸ்ரேலிங் பவுண்ட் நாணயத் தாள்கள், ஆயிரத்து 300 யூரோ நாணயத்தாள்கள் என்பன திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM