கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை வழிமறித்து இளைஞரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்

By T Yuwaraj

19 Feb, 2020 | 09:01 PM
image

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று இரவு 7மணியளவில் 3கிலோ 720கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஈரட்டை  பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த பஸ்ஸை துரத்தி சென்று ஈரட்டை பகுதியில் வழிமறித்து இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 3கிலோ 720கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். 

சாஸ்திரி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 24வயதுடைய இளைஞனை கைது செய்த போக்குவரத்து பொலிஸார் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர்  குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right