முல்லைத்தீவு   மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்களின் சமாசத்திற்கு  பொலிசாரின் செயற்பாட்டால் 14 இலட்சம் ரூபா நட்டம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமாசத்தின் தலைவர் ரீ.அன்ரனி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்திற்குச் சொந்தமான கூழர்வாகனத்தில் மீன் ஏற்றிச் சென்ற சமயம் அதில் கஞ்சா கடத்தப்படுவதாக தெரிவித்து மதவாச்சிப் பொலிசாரால் தடுத்துவைக்கப் பட்டுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த வாகனத்தில் 3500 கிலோ எடையுடைய மீனை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட போதே இவ்வாறு மறிக்கப்பட்டு சோதனை இடப்பட்டது.

இதனால் குறித்த நேரத்திற்குள் மீனைக் கொண்டு செல்ல முடியாததால் தமக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி சமாசத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இன்றைய தினம் (19-02-2020) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது  பொலிசாரின் செயற்பாட்டால்; சமாசத்திற்கு சுமார் 14 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றைய தினம் சமாசத்தின் தலைவர் பொது முகாமையாளர் குறித்த வாகனத்தின் சாரதி ஆகியோர் இணைந்து இம்முறைப்பாட்டை செய்திருப்பதாக  சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.