துரித உணவுகள் மற்றும் அதிக சக்கரை, கொழுப்பு அடங்கிய பானங்களை ஒரு வாரம் தொடந்து உட்கொள்ளுபவருக்கு அடுத்துவரும் நாட்களில் அதிக பசி ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.  இதே வேளை  அறிவாற்றல் மந்தமடைவதாகவும் கற்றல் திறன் குறைவடைவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

முழு நிறை போசணையற்ற உணவை ஒருவர் தொடர்ந்து ஒரு வாரம் உட்கொள்ளும் போது அது  நினைவகம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹிப்போகாம்பஸ் எனப்படும் சாம்பல் நிறப் பகுதியை பலவீனமடையச்செய்வதாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிப்போகாம்பஸ் எனப்படும் ஞாபகம் மற்றும் அறிவாற்றலுடன் தொடர்புடைய பகுதி  உணவுகள் பற்றிய எண்ணங்களை நினைவில் வைத்துகொள்ளும்.  பொதுவாக எவ்வளவு சுவையாக இருக்கிறது போன்ற எண்ணங்களை அடக்குவதன் மூலம் நாம் உணவு உட்கொண்ட பின்பு உணவுகள் மீது மேலும் ஆசை ஏற்படுவதை தடுக்கின்றது. இதன் காரணமாக  அதிக உணவைப் உட்கொள்வதில் இருந்து நாம் பாதுகாக்கப்படுகின்றோம்.

இது சரியாக இயங்காதபோது, நாம் நமக்கு பிடித்த உணவுகளை  எதிர்க்க முடியாமல் போகின்றது  என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆஸ்திரேலியாவின் மேக்வாரி பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்டீவன்சன் இத குறித்து கூறுகையில்,  'கேக், சாக்லேட் போன்ற ஒருவருக்கு பிடித்த உணவுகளை பார்க்கும்போது, இதை சாப்பிட்டால்  எவ்வளவு நன்றாக இருக்கும் என்று  நினைவில் கொள்கிறோம்.

'நாம் பசியின்றியிருக்கும்போது ஹிப்போகாம்பஸ் பொதுவாக இந்த நினைவுகளை அடக்குகிறது, அதை சாப்பிடுவதற்கு நமக்கு ஏற்படும் விருப்பத்தை குறைக்கிறது.

ஆனால் "ஒரு வாரத்திற்கு துரித உணவை உட்கொள்ளும் போது அவ் உணவுகள்  ஆசையை அதிகப்படுத்துவதன் மூலம் ஹிப்போகாம்பஸை பாதிக்கின்றது. இதன் காரணமாக  சுய கட்டுப்பாட்டை இழக்கப்படுகின்றது.  என தெரிவித்துள்ளார்.